சென்னையை சேர்ந்த ராஜேஸ்தீனா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. நான் விழுப்புரம் மாவட்டம் திருவத்தூரில் கிராம நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டேன். என்னை நூலகர் கிரேட் 3 என்ற அந்தஸ்தில் அரசு நியமித்து உத்தரவிட்டது. பின்னர் படிப்பு ஆவணங்களை மாவட்ட நூலகர் ஆய்வு செய்து எனது பதவியை பறித்து உத்தரவிட்டார். தபால் மூலம் எம்ஏ படித்தது தவறானது. எனவே பதவி பறிக்கப்பட்டதாக மாவட்ட நூலகர் அறிவித்தார். நூலகர் உத்தரவை ரத்து செய்து எனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம்,, மாவட்ட நூலகர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மாவட்ட நூலகர் அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராஜேஸ்தீனா தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது அரசு தரப்பில்கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு பி.ஏ. படித்து முடித்து, அதன்பிறகு 2 ஆண்டு எம்.ஏ படித்தால்தான் அது சட்டப்படி செல்லும், நேரடியாக தபால் மூலம் மனுதாரர் எம்.ஏ. படித்தது செல்லாது எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இதை நீதிபதி கே.சந்துரு ஏற்றுக்கொண்டு தபால் மூலம் நேரடியாக எம்ஏ படித்தவருக்கு அரசு பணி வழங்கியதை பறித்தது சரியானதுதான் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.