Pages

Wednesday, August 1, 2012

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம், புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்  ராமதாஸ் தலைமையில் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கத் தலைவர் ராக. ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வை 2012-13-ம் ஆணடு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களை, பதிவு மூப்பு முறையிலேயே நியமனம் செய்ய வேண்டும்.காலியாகவுள்ள 6700 நடுநிலைப் பள்ளித் தமிழாசிரியர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிவு மூப்பு முறையில் பணி வழங்க வேண்டும்.  நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் நேரமின்மை காரணமாக ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இதனால், தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படுவதால், இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி, ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.