கல்வி உதவித்தொகை
கையாடல் செய்யப்பட்டதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம்
செய்யப்பட்டனர். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் இந்த அதிரடி
நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் 1
முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின்
குழந்தைகளுக்காக மாவட்ட
ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 99 பள்ளிகளுக்கு
கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில்,
பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாகவும், பகுதி அளவிலும் கையாடல்
செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரனுக்கு புகார் வந்தது.இதையடுத்து,
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
அருள்மொழிதேவி விசாரணை மேற்கொண்டார். கல்வி உதவித்தொகை ரூ.1,57,250 கையாடல்
செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுச்சத்திரம் ஒன்றியம்
காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சரவணன்
கடந்த ஜூலை 23-ம் தேதி கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல,
உதவித்தொகையை கையாடல் செய்ததாக கபிலர்மலை ஒன்றியம் பள்ளப்பாளையம் ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பூபதி, மோகனூர் ஒன்றியம்
பேட்டைப்பாளையம் ஆர்சி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சார்லஸ்,
செல்லியாபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியை தேன்மொழி
ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதற்கிடையே, மாவட்டம்
முழுவதும் கல்வி உதவித்தொகை பெற்ற பெரும்பாலான பள்ளிகளில் சுகாதாரமற்ற
தொழில் செய்வோரின் குழந்தைகள் மட்டுமன்றி அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும்
கல்வி உதவித்தொகை பெற்று கையாடல் நடந்திருப்பதும், அதற்கு தரகர்கள்
உதவியுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை ஊழியர்களே உடந்தையாக
செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து ஆட்சியர் அனுப்பிய
அறிக்கையை அடுத்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரக தணிக்கைப் பிரிவு
அலுவலர்கள் 3 பேர் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற
பள்ளிகள் அனைத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.நாமக்கல்
வட்டாரத்தில் 5, மோகனூர் 3, புதுச்சத்திரம் 2, சேந்தமங்கலம் 1,
நாமகிரிப்பேட்டை 20, திருச்செங்கோடு 1, பரமத்தி 38, கபிலர்மலை 6, ராசிபுரம்
1 என மாவட்டம் முழுவதும் 77 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ரூ.68.46
லட்சத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாடல் செய்திருப்பது
உறுதியானது.ஏற்கெனவே 4 தலைமை ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்
செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் சவிதா
வழிகாட்டுதலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 62 ஊராட்சி ஒன்றியப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது.
மீதமுள்ள 11 உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய
அந்தந்தப் பள்ளித் தாளாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தப்
பெரும் மோசடியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்களுக்கும் தொடர்பு
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்
துறை அலுவலர் ராமச்சந்திரன், 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்
ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
குற்றவியல் நடவடிக்கைக்கு ஆட்சியர் பரிந்துரை
கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்று ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது: சுகாதாரமற்ற தொழில் புரிபவர் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயர்களிலும் பெற்றுள்ளதுடன், சீருடை, கல்வி உபகரணங்களுக்கு என மாணவ, மாணவிகளிடம் கையெழுத்துப் பெற்று தலைமையாசிரியர்கள் பெருமளவில் கையாடல் செய்துள்ளனர்.முதல் கட்டமாக துறை ரீதியான நடவடிக்கையாக 77 தலைமையாசிரியர்களும் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மாவட்டக் குற்றப் பிரிவு மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.மேலும், இந்த மோசடியில் தரகர்கள் உதவியுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர்கள் நேரடியாகத் தொடர்பில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் என 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும். இதேபோல மோசடிகள் நடைபெற்று விடாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் அனைத்து மாணவர்களின் பெயர்களிலும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு இனிமேல், அனைத்து உதவித் தொகைகளையும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.