மாநிலம் முழுவதும், 1,000 மெட்ரிக் பள்ளிகள்
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. நிலம் குறைவாக இருப்பது உள்ளிட்ட
காரணங்களைக் காட்டி, அங்கீகாரம் தர மறுக்கின்றனர் என தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலர்
நந்தகுமார் கூறினார்.
நிருபர்களிடம்
அவர் கூறியதாவது: பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான
சிறுமி சுருதியின் குடும்பத்திற்கு, சீயோன் பள்ளி நிர்வாகம், ஐந்து லட்சம்
ரூபாய் வழங்க வேண்டும். எங்களது சங்கம் சார்பில், விரைவில் ஐந்து லட்சம்
ரூபாய், சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்படும். இது போன்ற சம்பவங்கள்,
எங்கும் நடக்கக் கூடாது.
பள்ளி வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும்
என, பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் அங்கீகாரம்
இல்லாமல் 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நிலம் குறைவாக
இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, அங்கீகாரம் தர மறுக்கின்றனர். இந்த
பள்ளிகளின் வாகனங்களுக்கு தகுதிச் சான்று கேட்டால், பள்ளியின் அங்கீகார
சான்றிதழ் கேட்கின்றனர்.
இந்த பள்ளிகளில் ஏதாவது அசம்பாவித சம்பவம்
நடந்தால் என்னாவது? மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்க
வேண்டும் என்றிருப்பதை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற நிலையில் மாற்ற
வேண்டும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.