Pages

Saturday, July 14, 2012

மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம்.

மூன்று பல்கலைக்கழகங்களில், காலியாக இருந்த துணைவேந்தர் பணியிடங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் துறை தலைவராக இருந்த குமரகுரு, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், மரபியல் துறை தலைவர் குணசேகரன், வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், பதிவாளர் மணிமேகலை, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் உயர்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.