Pages

Saturday, July 14, 2012

ஆசிரியர் பணி நிரவல் கவுன்சலிங்

மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கட் டாய கல்வி சட்டத்தின்படி ஒரு வகுப்பில் 30மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். கூடுதலாக ஆசிரியர்கள் இருந்தால் மிகை ஆசிரியர்கள் என கணக்கிடப்பட்டது. இந்நிலை நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்தது. கிராமப்புற பள் ளி களில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.  

எனவே மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளில், கூடுதலாக ஆசிரியர்கள் உள்ளனர் என முதன்மை க ல்வி அலுவலர் மூலம் கணக்கிடப்பட்டது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் திட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யும் கவுன்சலிங் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
முதல்கட்டமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பணி நிரவல் கலந்தாய்வு நேற்று ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலு வலர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.
தமிழ்ஆசிரியர் பணியி டம் 41, ஆங்கில ஆசிரியர் பணியிடம் 85, கணித ஆசி ரியர் பணியிடம் 48, அறிவி யல் ஆசிரியர் பணியிடம் 50, சமூக அறிவியல் பாட ஆசிரியர் பணியிடம் 101 என மொத்தம் 325 காலிபணியிடம் காண்பிக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்களில் தமிழாசிரியர் 39பேர், ஆங்கில ஆசிரியர் 19பேர், கணித சிரியர் 46 பேர், அறிவியல் ஆசிரியர் 40 பேர், சமூக அறிவியல் ஆசிரியர் 5 பேர் என மொத்தம் 149பேர் மட்டும் கலந்து கொண்டு பணிக்கான உத்தரவை பெற்றனர். இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிக தூரம் சென்று பணியாற்றி வந்தவர்கள். தற்போது பக்கத்தில் உள்ள பள்ளியை தேர்வு செய்து பணி உத்தரவை பெற்றனர்.
இன்னும் மாவட்டத்தில் தமிழ் ஆசிரியர் பணியிடம் 2, ஆங்கிலம் ஆசிரியர் பணியிடம் 66,  கணக்கு ஆசிரியர் பணியிடம் 2, அறிவியல் ஆசிரியர் பணி யிடம் 10, சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடம் 96 என மொத்தம் 176 பணியி டம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்திற்கு வேறு மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று வரவுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.