பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இம்மாத இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள
அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டுக்காக நடக்கும், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில், தனித் தேர்வராகப் பங்கேற்கும் மாணவர், அறிவியல் பாடத்தில்
செய்முறைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்காக நடக்கும் செய்முறை பயிற்சி வகுப்பில்
பங்கேற்க, ஜூன் 30க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் எனவும்,
இதற்காக அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
வேண்டும் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
கடைசி தேதியை நீட்டிப்பு செய்யக் கேட்டு,
அதிகளவில் கடிதங்கள் வந்தன. மேலும், ஏப்ரலில் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு
முடிவு வெளியாகாத நிலையில், அதில் தேர்ச்சி பெறுபவர்கள், 10ம் வகுப்பு
பொதுத் தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பு
செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.
எனவே, அடுத்த ஆண்டு நடக்கும் 10ம் வகுப்பு
பொதுத் தேர்வை, தனித்தேர்வாக எழுத இருப்பவர்கள், அறிவியல் பாட செய்முறை
பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து, பூர்த்தி செய்து, அதை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க
வேண்டும்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.