மாணவருக்கு, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ
ஆசிரியர் தண்டனை அளிக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா
எச்சரித்தார்.
பெரம்பலூர்
மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி,
அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்காத
நிலையில், வகுப்பிலேயே மாணவர் சிறுநீர் கழித்தார். இதனால், ஆசிரியர்
கொதிப்படைந்து, மாணவரை நையப் புடைத்தனர். இந்த விவகாரம், பெற்றோர்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல தனியார் பள்ளிகளில், சிறிய மாணவ,
மாணவியரைக் கூட, வகுப்பு நேரத்தில் சிறுநீர் கழிக்க, ஆசிரியர் அனுமதிக்காத
கொடூரம் நடக்கிறது. சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தால், நாளடைவில் பெரிய
பிரச்னையை ஏற்படும்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர்
சபிதாவிடம் கேட்ட போது, மாணவருக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை
அளிக்கக் கூடாது. அப்படியிருந்தும், சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற
சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தவிர்க்க
வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.