Pages

Sunday, July 29, 2012

ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 1,052 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், கடந்த மே மாதம் 23ம் தேதி, முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில், மொத்தம், 4.5 லட்சம் பேரும், தமிழகத்தில், 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து, சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சங்கர் ஐ.ஏ.எஸ்., அகடமி நிறுவனர் சங்கர் கூறும் போது, ஐ.ஏ.எஸ்., முதல் நிலைத் தேர்வில், மொத்தம் 13 ஆயிரத்து 92 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பர் என தெரிகிறது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.