சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட
பின், மதுரை உட்பட 5 மண்டல அலுவலகங்களுக்கும் இயக்குனர் அல்லது முதல்வர்
அந்தஸ்திலான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
திமுக
ஆட்சியில், 2007 மற்றும் 2010ம் ஆண்டில், சென்னை அண்ணா பல்கலையை கோவை,
திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை
எனப் பிரித்து, துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பல்கலையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,
எளிமையான நிர்வாகம் என்ற நோக்கத்தில், 500க்கும் மேற்பட்ட பொறியியல்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை, அந்தந்த பகுதியில் உள்ள பல்கலையின் கீழ்
செயல்படும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை அண்ணா
பல்கலையுடன், கிளை பல்கலைகள் இணைக்கப்படும் என்றும், கிளை பல்கலைகள், இனி
அண்ணா பல்கலை மண்டல அலுவலகங்களாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தப் பல்கலைகளின்
துணைவேந்தர்கள், பதிவாளர்கள் திரும்ப அழைக்கப்படவுள்ளனர். மண்டல
அலுவலகங்களுக்கு இயக்குனர் அல்லது முதல்வர் அந்தஸ்திலான அதிகாரிகளை
விரைவில் நியமிக்க, உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த
நியமனங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலை
துணைவேந்தர்கள் முருகேசன் (மதுரை), ராஜாராம் (திருநெல்வேலி), தேவதாஸ்
மனோகரன் (திருச்சி), கருணாகரன் (கோவை), தங்கராஜ் (சென்னை) ஆகியோருடன்
உயர்கல்வித் துறைச் செயலர் ஸ்ரீதர், சென்னையில் ஆலோசனை நடத்தி அரசின்
முடிவுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கடந்த 2007ல் துவங்கப்பட்ட திருநெல்வேலி,
திருச்சி, கோவை பல்கலை மாணவர்களுக்கு, இறுதியாண்டு தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. இப்பல்கலைகளுக்கு உட்பட்ட 2 லட்சம் மாணவர்களுக்கு,
கிளை பல்கலை பெயரில் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளன. பல்கலைகள் இணைப்புக்கு
பின், சென்னை அண்ணா பல்கலையில் இருந்து பட்டப் படிப்பிற்கான சான்றிதழ்கள்
வழங்க வாய்ப்புள்ளது.
அதாவது, மதிப்பெண் சான்றிதழ் ஒரு பெயரிலும்
(அண்ணா தொழில்நுட்பக் கிளை பல்கலைகள்), "டிகிரி&' சான்றிதழ் ஒரு
பெயரிலும் (சென்னை அண்ணா பல்கலை) வழங்கப்படும். உயர் கல்விக்காக, வெளிநாடு
செல்லும் மாணவர்களை அங்குள்ள பல்கலைகள் இருவிதமான சான்றிதழ்களுடன் ஏற்குமா
என்ற சந்தேகம், மாணவர்களுக்கு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.