Pages

Monday, July 30, 2012

இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் ககன் வெண்கலம்

லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா 594 புள்ளிகளுடன் 16வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ககன் நரங் 701,1 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.