Pages

Sunday, July 8, 2012

தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
உசிலம்பட்டி தேனி சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும்
கட்டிய தொகைக்கு ரசீதும் கொடுப்பது இல்லை. இதனை கண்டித்தும், அரசு ஆணை 2009ன்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரியும் பள்ளி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மைய உசிலம்பட்டி பகுதி அமைப்பாளர் ரவி, பொறுப்பாளர்கள் தங்கப்பாண்டி, சிவா, செல்லப்பாண்டி, ஆறுமுகம், அழகேசன், முத்திருளன் உள்பட 80க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.