Pages

Wednesday, July 4, 2012

காலியிடங்கள் தெரியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

முதுநிலை  மற்றும் பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் நடைபெறுவதற்கு முன்னதாகவே காலி பணியிட பள்ளிகள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தி உத்தரவு வழங்கி வருகிறது. முதலில் மாவட்ட அளவிலும், பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு இடம் மாற விரும்புபவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வுகள் நடத்தப்படும் நாள் வரை எந்தெந்தப்பள்ளிகளில் இடம் உள்ளது என்பது தெரிவிக்கப்படுவது இல்லை. கலந்தாய்வு நடைபெறும் நாளில்தான் அறிவிக்கப்படுகிறது.
இன்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. நாளை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது. குறிப்பிட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்று சென்றவர்கள், ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்டுள்ள காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆனால் எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கான காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் நடைபெற உள்ள கலந்தாய்வு நேரத்தில் தான் காலி இடங்கள் அறிவிக்கப்படும். இதனால் வெகு தொலைவில் இருந்து பயணம் செய்து வரும் ஆசிரியர்கள் தகுந்த இடத்தை தேர்வு செய்ய முடிவதில்லை. அடுத்த கட்டமாக 13 மற்றும் 14ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட அளவில் இடமாறுதல் கலந்தாய்வும், 16 மற்றும் 17ம் தேதிகளில் பிற மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது. எனவே, எந்த ஊரில் எந்த பாடப்பிரிவுகளுக்கு காலி இடம் உள்ளது என்ற விவரங்களை கல்வித்துறை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.