Pages

Monday, July 30, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி

நெல்லூர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து குறித்து அறிய உதவி எண்கள்: நெல்லூர் உதவி எண்கள்: 0861-2345863, 2345864, 2345865, 2345866 
விஜயவாடா உதவி எண்கள்: 0866-2576924 2575038
புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், நெல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு பெட்டியில்  இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர். புது தில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு
இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்,  இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்‌கு விரைந்த‌ார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோது, இந்த விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது...என்றார்.நெல்லூர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்து குறித்து அறிய உதவி எண்கள்: நெல்லூர் உதவி எண்கள்: 0861-2345863, 2345864, 2345865, 2345866 விஜயவாடா உதவி எண்கள்: 0866-2576924 2575038

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.