தமிழக அரசு
அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும்
திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப்
பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் BOOT அடிப்படையில் நடைமுறைப்படுத்த
ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக
31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் மேலும் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம்1999 பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுப்படுத்த முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம்
127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல்
வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த
நடவடிக்கைகள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கணினி மூலம்
கல்வியினை பயின்று, தங்களது அறிவாற்றலையும் திறனையும் வளர்த்துக் கொண்டு
அகில இந்திய மற்றும் உலகளாவிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில்
முதன்மை நிலை பெற வாய்ப்பு உருவாகும் என்று தமிழக அரசு அனுப்பியுள்ள
செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.