Pages

Thursday, July 26, 2012

10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து


தமிழகத்தில், 10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம், நடப்பு கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான சேர்க்கை விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விசாரணை நடத்தி, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (என்.சி.டி.இ.,) உரிய நடவடிக்கை எடுக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் 10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது.
கல்லூரிகளின் பெயர் பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
1. மியாசி கல்வியியல் கல்லூரி, சென்னை.
2. பாரதியார் கல்வியியல் கல்லூரி, சேலம் மாவட்டம்.
3. குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி, நாகர்கோவில்.
4. ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்.
5. எம்.எஸ்.இ.எஸ்., கல்வியியல் கல்லூரி, தான்தோன்றிமலை, கரூர் மாவட்டம்.
6. நரேந்தர் கல்வியியல் கல்லூரி, வெங்கடாசலபுரம், திருச்சி மாவட்டம்.
7. ஏ.ஆர்.ஆர்., கல்வியியல் கல்லூரி, வளையபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
8. ஏ.ஆர்.ஆர்., மகளிர் கல்வியியல் கல்லூரி, வளையபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
9. மாதா கல்வியியல் கல்லூரி, மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
10. ஸ்ரீ கல்வியியல் கல்லூரி, பாப்பநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.