Pages

Tuesday, June 19, 2012

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.
இம்முறையினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் வலுவூட்டதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெற்றிக் பள்ளி ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 2012 ஜூன் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடைமுறைப்படுத்தும் முறையினை உற்றுநோக்கி, இம்முறையினை செயல்படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு எழும் ஐயங்களையும், இடர்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை அறிக்கையாக தயார் செய்து அவ்வறிக்கையினை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் 22.06.2012 அன்று தனி நபர் மூலம் படிவங்களின் தொகுப்பினை முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களிடம் சமர்பிக்கவ்வும், சமர்ப்பித்தற்கான அறிக்கையினை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


 

1 comment:

  1. It is dangerous to handle everything without enough training and experience . In this CCE teachers have been forced to implement . The officers ordered the teachers to pass the system what they were implemented even though it is a failure one.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.