Pages

Wednesday, June 20, 2012

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட BT & PG ASST பதிவுமூப்புதாரர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல், 2010-11ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள 120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இரு தேர்வு முடிவுகள் இன்று(ஜுன் 20) வெளியீடு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.