குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத
அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள்
அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்
உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர்
கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த,
மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக,
விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை,
15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும்
கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில்
சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும்
நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய
மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி
அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம்
ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர்
ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.