Pages

Tuesday, June 12, 2012

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.