பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பவர்களுக்கு ஒரு
ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை
எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் எம்.அய்யனார் கூறியதாவது:
கடந்த 2008&ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டு சட்டம், சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புகையில்லா
தமிழகத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்
ஆகிய 3 மாவட்டங்களில் சோதனை முறையிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தை புகையில்லா மாவட்டமாக மாற்றும் திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் எம்.அய்யனார் கூறியதாவது:
கடந்த 2008&ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டு சட்டம், சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை பறக்கும் படையினர் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 1082 பேரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டார அளவில் சுகாதார மேற்பார்வையாளர் தலைமையில் 5 பேர் கொண்ட பறக்கும் படை செயல்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் புகையிலை பொருட்கள் விற்றால் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு ஒரு ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். அனைத்து இடங்களிலும் புகையிலை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அய்யனார் கூறினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, விரிவாக்க கல்வியாளர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
It is good to stop selling Tobago not only near by schools but also all over country
ReplyDeleteTHIS RULES IMPLEMENT IN ALL DISTRICT
ReplyDeleteTIRUCHI DISTRICT NOT FOLLOW THE RULES
(In chatram Bus stand) Near 2 college& 2Schools.
students smoke regularly interval period