சென்னைப் பல்கலையில், எம்.பில்., படிப்பில்
சேர, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பில்., படிப்பிற்கான
விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல் தேதி, வரும் 12ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னைப் பல்கலையில், எம்.பில்., படிப்பில் சேர, விண்ணப்ப தேதி
நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பில்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறுதல்
மற்றும் சமர்ப்பித்தல் தேதி, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை, www.unom.ac.in
என்ற பல்கலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்
என, சென்னைப் பல்கலை பதிவாளர் கோடீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்
அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், இனி உதவித்தொகை வழங்கப்படும்;
பிஎச்.டி., மாணவர்களுக்கு, 8,000 ரூபாயாகவும், எம்.பில்., மாணவர்களுக்கு,
5,000 ரூபாயாகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக
துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.