சென்னையில் உள்ள
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் வரும் கல்வியாண்டில் பட்ட மற்றும்
பட்ட மேற்படிப்பு படிக்க மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு சார்பில்
வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி
நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ.
(தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்புகள் மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர்
நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு)
ஆகியவைகளில் சேர்ந்து
பயிலும் மாணவர்களுக்கு தொழிலாளர் நல அலுவலர், பணியாளர் அலுவலர், மனிதவள
அலுவலர் போன்ற பதவிகளுக்கு இந்த பட்ட / பட்டய படிப்புகள் பிரத்யேக
கல்வித்தகுதியாக தொழிற்சாலைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும்,
தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் மற்றும் தொழிலாளர்
உதவி ஆய்வர் பதவிகளுக்கு இப்பட்ட / பட்டய படிப்புகள் முன்னுரிமை தகுதிகளாக
நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்புகளுக்கு
பல்கலைக்கழக அங்கீகாரமும், பட்டயப் படிப்புக்கு தமிழக அரசின் அனுமதியும்
உள்ளது. விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும்
ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்பிற்கும்
விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இக்கல்வி
நிலையத்தில் கிடைப்பதற்கான கடைசி நாள் 15.6.2012 மாலை 4 மணி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.