வரும் 22ம் தேதி முதல், ஜூலை 4ம் தேதி வரை
நடக்கும் பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை,
ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
பள்ளி
மாணவராக தேர்வெழுதி தோல்வியடைந்து, பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்த மாணவ,
மாணவியர், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே, ஹால் டிக்கெட் பெறலாம். ஏற்கனவே,
தனித்தேர்வாக எழுதி தோல்வியுற்று விண்ணப்பித்தவர்கள், கல்வி மாவட்டவாரியாக
நிர்ணயித்துள்ள மையங்களுக்குச் சென்று, ஹால் டிக்கெட் பெறலாம்.
சென்னை நகரைப் பொறுத்தவரை, அனைத்து தனித்
தேர்வரும், அண்ணா சாலையில் உள்ள மதரசா மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட்
பெறலாம். ஹால் டிக்கெட் பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்துக்
கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.