Pages

Sunday, June 3, 2012

10ம் வகுப்பு உடனடித் தேர்வு - ஜுன் 25ம் தேதி துவங்குகிறது.

பத்தாம் வகுப்பு உடனடித்தேர்வு, 25ம் தேதி துவங்கி, ஜூலை 2ம் தேதி முடிகிறது.
தேர்வுத்துறை அறிவிப்பு: தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், உடனடித்தேர்வில் பங்கேற்கலாம். பள்ளி மாணவராக இருந்தால், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்துடன், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.
தனித்தேர்வர், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

கட்டண விவரம்: எஸ்.எஸ்.எல்.சி., (பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்)க்கு, அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, 125 ரூபாய், மெட்ரிக்., எனில், ஒரு பாடத்திற்கு, 135 ரூபாய், கூடுதலான பாடங்களுக்கு தலா 100 ரூபாயும்; ஆங்கிலோ இந்திய மாணவர், ஒரு பாடத்திற்கு, 85 ரூபாய், கூடுதலாக எழுதும் பாடங்களுக்கு தலா, 50 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும்.
தேர்வு தேதி: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் அனைத்தும், 25ம் தேதி துவங்கி, முறையே, ஜூலை 2, 3, 5 மற்றும் 4ம் தேதி முடிகிறது. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.