Pages

Monday, June 18, 2012

மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல் - வெளியிட்டமை - மேல்முறையீடு பெறப்பட்டமை - திருத்திய பட்டியல் வெளியீடு.

மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய பட்டியல் வெளியீடு - திருத்திய பட்டியலை பதிவிறக்கம் செய்ய...
இப்பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநரின் முன் அனுமதியின்றி எவ்வித தனி நபரும்  வெளியிட அனுமதியில்லை என்பதால் மேலே OFFICIAL SITE LINK கொடுக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 112850 / W1 / இ1 / 2012 , நாள். 16.06.2012 
மேல்நிலைக்கல்விப் பணி - 01.01.2012 அன்றைய நிலையில் - அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல் - வெளியிட்டமை - மேல்முறையீடு பெறப்பட்டமை - திருத்திய பட்டியல் வெளியீடு.
01.01.2012 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் (இப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது, அதன்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக பெறப்பட்ட மேல்முறையீட்டு விவரங்களின் படியும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கடிதத்தின் வாயிலாக பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மேற்காண் பொருள் சார்ந்து பார்வை (1)ல் நாள். 25.04.2012 அன்று வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இதன் மூலம் இரத்து செய்து, திருத்திய பட்டியல் இத்துடன் இணைத்து  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படுகிறது. இதனை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் மறு அஞ்சலில் சமர்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கோரப்படுகிறார்கள்.

                                                                                                                             ஓம்/- ப.மணி
                                                                                                               பள்ளிக் கல்வி இயக்குநர்


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.