Pages

Monday, May 14, 2012

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்.

மாநில பொதுச் செயலாளர் பங்கேற்று, மாநில செயற்குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், மே 17, 18, 19 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நடக்க உள்ள அகில இந்திய மாநாடு, பேரணி ஆகியவற்றில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 500 ஆசிரியர்கள் பங்கேற்பது. 100 பிரதிநிதிகள் கறுப்பு, வெள்ளை சீருடையில் இயக்ககொடி ஏந்தி பங்கேற்பர்.

வெண்ணந்தூர் வட்டாரத்தில், 16 ஆசிரியர்களுக்கு மட்டும் தனி ஊதியம் வழங்க அனுமதி மறுக்கும் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ராசிபுரம், புதுச்சத்திரம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு விரைந்து தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.