Pages

Sunday, May 20, 2012

அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் - தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 299 நாள். 19.05.2012
அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு முதற்கட்டமாக 11432 பணியிடங்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் :-
* பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.
* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் 25 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* உதவியாளர்கள் நியமனத்திற்கு 25 - 35 வயதிற்குள் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* .அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ரூ.2500-5000 + தர ஊதியம் ரூ.500/- என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ரூ.1800-3300 + தர ஊதியம் ரூ.400/- என்ற விகிதத்திலும்,
உதவியாளர் பணிக்கு ரூ.1300-3000 + தர ஊதியம் ரூ.300/- என்ற விகிதத்திலும் உரிய படிகளுடன் வழங்கப்படும்.
* விண்ணப்பம் வழங்கும் நாள், விண்ணப்பம்  சமர்பிக்க கடைசி தேதி நேர்முகத் தேர்வு மற்றும் இதர விபரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களால் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
* அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய...



No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.