திருச்சியில் 10ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் மையங்களான ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, முசிறி அமலா மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று வாயிற் கூட்டங்கள் நடைபெற்றன. கழக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் செல்வேந்திரன், தங்கமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பட்டமேற்படிப்பு ஊக்க ஊதியம் உயர்வு, தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டுப் பணிக்கான ஊதியம் 3 மடங்கு உயர்த்தி வழங்குதல், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடருதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் கோபிநாதன், ராஜூ, சண்முகம், ஆசைத்தம்பி விக்டர் ஏசுதாஸ், தங்கமணி, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment