Pages

Friday, May 18, 2012

இரண்டு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றின் தேதி மாறுமா?

மே 27ம் தேதி, ரயில்வே தேர்வும், முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வும் நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள், எந்தத் தேர்வில் பங்கேற்பது என, புரியாமல் தவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம், 2,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 27ம் தேதி காலை, போட்டித் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். இதே நாளில், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணிக்கான தேர்வும் நடக்கிறது. இத்தேர்வை, பட்டதாரி தகுதி வாய்ந்தவர்கள் எழுதலாம் என்பதால், முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பலரும், ரயில்வே தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு தேர்வுகளும் நடப்பதால், எந்தத் தேர்வில் பங்கேற்பது என புரியாமல், தேர்வர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக, ஒரே நாளில் இரண்டு தேர்வு அட்டவணை இருப்பது தெரிய வந்தால், ஏதாவது ஒரு தேர்வு தள்ளி வைக்கப்படும். 27ம் தேதி தேர்வு விவகாரத்தில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வை தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுவரை, டி.ஆர்.பி., எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை. தேர்வு நெருக்கத்தில், அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.