Pages

Monday, May 7, 2012

அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி.

பட்டுக்கோட்டை தாலுக்காவில் அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை தாலுக்கா பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் பாலமுரளி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல்முறையே தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவேந்திரன் ஓய்வுபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவார். தாய் அல்லிக்கொடி, சகோதரி ரம்யா. இவர், பல் டாக்டராக பணிபுரிகிறார். பாலமுரளியின் அண்ணன் உமாசங்கர் விவசாயம் செய்து வருகிறார்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலமுரளி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும், நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வும் படித்தார். இதைத்தொடர்ந்து பிடெக் படிப்பை காரைக்குடி சி.இ.சி.ஆர்.ஐ., கல்லூரியிலும் முடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே பாலமுரளி தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.பி.எஸ்., ஆக தற்போது வதோராவில் பயிற்சி பெற்று வருகிறார். இவரது படிப்பு துவக்கம் முதலே அரசு பள்ளிகளில் தமிழ்வழி மூலமே கல்வி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.