ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாயில் அமைக்கப்படும் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி, அடுத்த கல்வியாண்டில் செயல்படத் துவங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நாவலூர் சூரப்பட்டு பகுதியில், தேசிய அளவிலான, மிகச்சிறந்த சட்டக்கல்வி வழங்கும் வகையில், தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி நிறுவ, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, வேளாண்மை பல்கலைக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவும், அரசு முடிவு செய்துள்ளது. இதன் கட்டுமானப் பணிக்காக, 100 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சட்டப்பள்ளி, அடுத்த கல்வியாண்டிலேயே துவங்கப்படும் எனவும், இதற்கான பணிகளை விரைந்து, ஒருங்கிணைப்பு செய்ய, தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், சட்டம், நீதித்துறை மானியக்கோரிக்கை, கொள்கை விளக்கக் குறிப்பில், அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.