குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை 9.5 லட்சம்
பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான
காலக்கெடுவை, ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
எனவே, கடைசி தேதிக்குள், விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயரலாம் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.
குரூப் - 4 நிலையில், இளநிலை
உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர்
மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகளில், 10 ஆயிரத்து 718 காலிப் பணியிடங்களை
நிரப்ப, ஜூலையில் போட்டித் தேர்வு நடக்கிறது.
இதற்கு, ஏப்ரல் 27 முதல்,
இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கடைசி நாள் 28ம்
தேதியுடன் முடியும் நிலையில், ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வாணையச்
செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, "இதுவரை 9.5 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர். தினமும், 60 ஆயிரம் பேர் முதல் 70 ஆயிரம் பேர் வரை
விண்ணப்பிக்கின்றனர். எனவே, அனைவருக்கும் போதிய கால அவகாசம் வழங்கும்
வகையில், காலக்கெடுவை ஜூன் 4 வரை நீட்டித்துள்ளோம்.
விண்ணப்பம் மற்றும் தேர்வுக்
கட்டணத்தை, ஜூன் 6 வரை செலுத்தலாம். கடைசி தேதிக்குள், மொத்த பதிவுதாரர்கள்
எண்ணிக்கை 13 லட்சம் வரை உயரலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.