Pages

Wednesday, May 2, 2012

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: விரைவில் தேர்வு முடிவுகள்.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு, ஏப்., 8ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்திலிருந்து, மூன்று லட்சத்து, 53 ஆயிரத்து ஆறு மாணவர்களும், நான்கு லட்சத்து ஏழாயிரத்து 969 மாணவியரும், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட, எட்டு லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வை எழுதினர்.

65 மையங்கள் மொத்தமுள்ள, 8.22 லட்சம் விடைத்தாள்களை திருத்த, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இரண்டு மையங்கள் வீதம், 65 மையங்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணிக்கு, முதன்மை தேர்வு ஆய்வாளர்கள், கூர்மை நோக்கு ஆய்வாளர்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் என, 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு விடைத்தாள் மையத்துக்கும் குறைந்தது, 90 ஆயிரம் விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருத்தம் செய்யப்பட்ட விடைத்தாள்கள், "சீல்" வைக்கப்பட்டு தேர்வு கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண்கள், புகைப்படம் ஒட்டிய மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யப்படும். இதற்கான பணியை, தேர்வுத்துறை இன்று துவக்குகிறது. இப்பணி நிறைவுற 25 நாட்களாகும். மின் தடை காரணமாக ஒரு வாரம் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.
அதன்பின், மே கடைசி வாரத்தில் தான் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான ஒரு வார இடைவெளியில், எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.