ஆயிரத்து 592 பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள்
மூலம் பயிற்சி அளித்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளதாக ஆட்சியர் அஜய் யாதவ்
தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் தலைமையில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் பேசியது: 14 வயதுக்குள்பட்ட பள்ளிசெல்லாக் குழந்தைகள்
மொத்தம் 1592 பேர் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் இணைப்பு
பள்ளிகள் மூலம் பயிற்சி அளித்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
நடப்பு கல்வியாண்டில் நிலுவையிலுள்ள கட்டடப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.
பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்,
வகுப்பறைகளுக்கு டைல்ஸ் பதித்தல் ஆகிய பணிகளை அனைத்து பள்ளிகளிலும்
நிறைவேற்றவேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பொன். குமார், அனைவருக்கும் கல்வி
இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சு.மதி, குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர்
மு.ராஜபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலர் எ.ஜோசப்சேவியர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்,
அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொண்டு நிறுவனத்தினர்
கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.