Pages

Wednesday, May 30, 2012

1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரே புத்தகம்.

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு மற்றும் மதிப்பெண் விஷயத்தில் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்று 3 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதித்தேர்வில் ஆண்டு முழுவதும் படித்த அனைத்துப் பாடங்களையும் படித்து தேர்வு எழுத வேண்டும். இதனால், மாணவர்கள் அனைத்துப் புத்தகங்களையும் தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் தேர்வுச்சுமையும் இருந்தது. இந்நிலையை  போக்க இந்தக் கல்வி ஆண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்படும்.

இதில் தமிழ், ஆங்கிலம் பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் புத்தகச்சுமை குறைந்துள்ளது. இந்தப் புத்தகங்கள் சராசரியாக 600 கிராம் எடையளவே உள்ளன. இதுவரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறன் பார்க்கப்பட்டதால் மாணவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை யும் நிலவி வந்தது. இந்நிலையை மாற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்படுவது போல் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.