Pages

Friday, April 20, 2012

வினாத்தாள் மாற்றி வழங்கியது தொடர்பாக விசாரணை.


வேலூர் அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி கொடுத்த விவகாரம் குறித்து, விசாரணை நடக்கிறது.
வேலூரில் உள்ள அரசு கல்லூரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் ஆங்கிலத் தேர்வு நடந்தது. இதில், பழைய மாணவர்களுக்கான அரியர் வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது.

அதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் திண்டாடினர். பலர் தேர்வு எழுதாமலேயே சென்று விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள், நேற்று (ஏப்.,19), வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் புகார் செய்தனர். வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுப்பதாக, பல்கலை அதிகாரிகள் மாணவர்களிடம் கூறி அனுப்பி விட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷபி கூறியது: அரியர் தேர்வு மாணவர்கள், ரெகுலர் மணவர்களுக்கு தனித்தனியாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. வினாத்தாள் மாற்றி கொடுத்திருந்தால் அது தவறு தான். இது குறித்து, வேறு கல்லூரி பேராசிரியர் மூலம் விசாரித்து அறிக்கை தயார் செய்யப்படும்.
பல்கலைக்கழக கவுன்சிலில் இந்த பிரச்னையை கொண்டு சென்று, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு துவங்கிய சிறிது நேரத்தில் வினாத்தாள் மாறியது குறித்து தகவல் தெரிவித்திருந்தால், ரெகுலர் மாணவர்களுக்கான வினாத்தாளை கொடுத்திருக்கலாம். கேள்வித்தாள் மாறியது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.