நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக மூட முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி வேண்டி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளது என மத்திய இணை அமைச்சர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைசச்சர் புரந்தரேஸ்வரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்ஜினியரிங், நிர்வாகவியல், மற்றும் கம்ப்யூட்டர் கல்விகளை கற்றுத்தரும் நிறுவனங்கள் புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதியுடன் (ஏஐசிடிஇ) துவக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் அவைகளை மூடுவதற்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 58 நிறுவனங்கள் உள்ளன. தொடர்ந்து ராஜஸ்தானில் -18, உ.பி.,யில்-17,குஜராத்தில்-13 மகா.,வில் -7, ஹரியானா, பஞ்சாப்பில் -6, ம.பி.,யில் -5, சட்டிஸ்கரில்-4, தமிழகம், மேற்குவங்கத்தில் -2, பீகார் மற்றும் உத்தரகண்ட்டில் தலா -1 என பட்டியல் தொடர்கிறது. மோசமான நிர்வாக சூழ்நிலை காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவி்த்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.