Pages

Tuesday, April 24, 2012

தபால் நிலையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில், தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில், ஆன்-லைனில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க, சேவை துவக்கப்பட உள்ளது.
போலீஸ் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்கள், தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, தங்க நாணயம் விற்பனை, மின் கட்டணம் வசூல், வாக்காளர் விண்ணப்பம் என, தபால் நிலையங்களில் மக்கள் சேவைக்கான பணிகள் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., நிறுவனத்திற்கான விண்ணப்பங்களை, ஆன்-லைனில் அனுப்ப முடியும். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு, ஆன்-லைன் வாய்ப்பை பயன்படுத்த, தபால் நிலையங்களில், டி.என்.பி.எஸ்.சி., நிறுவனத்தினர், வாடகைக்கு இடம் பெற்றுள்ளனர். இந்த இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., நிறுவனமே கம்ப்யூட்டர், அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும்.
தபால் நிலையங்கள் இயங்கும் நேரங்களில், ஆன்-லைனில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பங்கள் அனுப்பும் சேவை, தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் விரைவில் துவங்கவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.