சென்னை: வரும் கல்வி ஆண்டிற்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், முன் கூட்டியே பிரிண்டிங் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.
இவற்றை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின், 22 மாவட்ட வட்டார அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, பாடப்புத்தகங்களுக்கான கட்டணம், கடந்த ஆண்டு அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம் : முதல் இரண்டு வகுப்புகளுக்கு 200 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை 250 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு 300 ரூபாய், ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு 350 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பெற்றுக்கொள்ளும் போது, 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தனிப்பிரதிகள் சில்லரை விற்பனையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, பிரதி ஒன்றின் விலை 60 ரூபாய்க்கும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 65 ரூபாய்க்கும், ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை, 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.