Pages

Saturday, April 28, 2012

ஏஐஇஇஇ : ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு.

சென்னை, ஏப். 7 : இந்தியாவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வாகும். இந்தியாவில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல், ஆர்கிடெக்சர், பிளானிங், பார்மசி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இந்த பொது நுழைவுத் தேர்வு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த ஏஐஇஇஇ நுழைவுத் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வு என இருமுறைகளில் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதும் நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழகத்தில் தற்போது பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை என்பதால் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இதனை எழுதத் தேவையில்லை. ஆனாலும், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

சிபிஎஸ்இ நிர்வாகத்தால் நடத்தப்படும் இந்த தேர்வை எழுத பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடங்களை கட்டாயமாகவும், வேதியியல், உயிர்தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிரியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். பிளஸ் 2 தேர்வெழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.

ஆன்லைன் தேர்வு மே 7ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.