தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் மே 5-ம் தேதி மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தமிழக ஆசிரியர் கூட்டணி (கோவை மாவட்டக் கிளை) மாநிலத் தலைவர் கோ.முருகேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் ஆகியவை வரும் மே 5-ம் தேதி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடைபெறுகிறது.
கல்விக் கருத்தரங்கம்: மே 5-ம் தேதி பகலில், இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களை விளக்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமி பங்கேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, அகில இந்திய கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய தன்பங்கேற்பு பென்சன் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து சூலூர், அன்னூர், மதுக்கரை, எஸ்.எஸ்.குளம், சுல்தான்பேட்டை, காரமடை, மேட்டுப்பாளையம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், கோவை மாநகரம், பொள்ளாச்சி நகரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.