Pages

Wednesday, April 18, 2012

ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்குகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,4 ல் துவங்கி நடந்து வருகிறது. ஏப்., 23 ல் நிறைவு பெறுகிறது. இதில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கவுள்ளது. ஏப்., 24 ல் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் செய்யும் முகாம் பொறுப்பாளர்களாக பணி ஏற்பர்.
அப்போது விடைத்தாள்களின் கட்டுகளை பெற்று விடைத்தாள் திருத்தம் செய்ய ஏதுவாக, முதல்கட்ட பணிகளை செய்வர்.
ஏப்., 26 ல் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். 27 ல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.