Pages

Wednesday, April 11, 2012

அரசாணை எண். 123 நிதித் துறை நாள். 10.04.2012 ன் படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஊதியக்குழு கல்வித்துறைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்துமா?

அரசாணை எண். 123  நிதித்(ஊதியப் பிரிவு) நாள். 10.04.2012 ன் படி நியமிக்கப்பட்ட ஊதிய குறைகளை நிவர்த்தி செய்யும் 3 நபர்(செயலாளர் மற்றும் கூடுதல் , இணை செயலாளர்)குழுவானது ஒரு சில துறைகளில் உள்ள குறிப்பிட்ட அலுவலர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இக்குழுவானது அரசாணை எண். 71 மற்றும் அரசு கடிதம் எண். 19111 / PAYCELL / 2011-4 ஆகிய இரண்டு நிதித்துறை சார்ந்த  அரசாணைகளில்  குறிப்பிட்ட அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் மேற்குறிப்பிட்ட அரசாணைகளை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் மேன்மை தாங்கிய சென்னை உயர்நிதீமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த 
தமிழக அரசால் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டு மேற்கூறிய அரசாணைகளால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு அவர்களின் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளவர்களும் / இனி வழங்க உள்ளவர்களின் மனுக்களையும் சேர்த்து  ஆராய்ந்து அரசுக்கு இக்குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும் கீழ்காணும் துறைகளில் பணியாற்றும் ஒரு சில குறிப்பிட்ட  அலுவலர்களுக்கு  பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* வேளாண்மைத்துறை
*வேளாண்மை பொறியியல் துறை
*கால்நடை பராமரிப்பு துறை 
*மீன் வளத்துறை
*நெடுஞ்சாலைத்துறை
*ஊராக வளர்ச்சித்துறை
*தொழில் மற்றும் வணிகத்துறை 
*தொழிற்சாலை ஆய்வகத்துறை
*மாநில சுகாரதாரத் போக்குவரத்து துறை 
*மோட்டார் வாகன பராமரிப்புத்துறை 
*பட்டுவளர்ச்சித்துறை
*மாநில போக்குவரத்துத்துறை 
*பொதுப்பணித்துறை 
*மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு ஆணையரகம் 
*பேரூராட்சிகள் 
*மின் ஆய்வுத்துறை
*சென்னை மாநகராட்சி 
*இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி  துறை 
*வருவாய்த்துறை
*காவல்துறை
*வனத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் குறைகளை களைய இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.