Pages

Thursday, April 19, 2012

தமிழ்நாட்டில் புதிதாக் இரண்டு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 11 புதிய கலை அறிவியல் கல்லூரிகளும், 7 புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வாசித்தார். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிலிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியிலும் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள சங்கராபுரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி, வேடசந்தூர், மொடக்குறிச்சி, திருமங்கலம், திருவொற்றியூர், பரமகுடி, கடையநல்லூர், அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம், அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.