பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்றுடன்(ஏப்ரல் 23ம் தேதி) முடிவடைந்தது. கடந்த 4ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்கிய நிலையில், கடைசி நாளான நேற்று, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைந்தது.
3,033 மையங்களில் நடந்த தேர்வில், மொத்தம், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த முதல் பொதுத் தேர்வு என்பதால், தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள் மத்தியில் அச்சம் இருந்தது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, கணிதத்தை தவிர, மற்ற தேர்வுகள் அனைத்துமே எளிதாக இருந்ததாக, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். மே மூன்றாவது வாரத்தின் இறுதியிலோ அல்லது நான்காவது வாரத்தின் துவக்கத்திலோ, இதன் முடிவுகள் வெளியாகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.