Pages

Wednesday, March 21, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படவுள்ளது.


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தகுதித்தேர்வு

இந்தியாவில் இலவச கட்டாய கல்விச் சட்டம் அமல்பட்டதன் எதிரொலியாக இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே, அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ ஏன் தனியார் பள்ளிகளில்கூட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் முதலாவது தகுதித்தேர்வினை ஜுன் மாதம் 3-ந் தேதி நடத்த உள்ளது. அன்றைய தினம் காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியே தகுதித்தேர்வு நடத்தப்படும்.

நாளை முதல் விண்ணப்பம்

இந்த நிலையில், தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டமும், மாதிரி வினாத்தாளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் www.trb.tn.nic.in நேற்று மாலை வெளியிடப்பட்டது. இரு தகுதித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களையும், மாதிரி வினாக்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் (டி.இ.ஓ. ஆபீஸ்) விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறளானிகளுக்கு ரூ.250 மட்டும்.

ஏப்ரல் 4 கடைசி நாள்

உரிய தேர்வுக்கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டுள்ள CHALLAN மூலம் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, படிவம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏப்ரல் 4-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால்மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.