Pages

Monday, March 19, 2012

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பரிந்துரை.


ராமநாதபுரம்,மார்ச்.19-

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதிவு தாரர்கள் பரிந்துரை செய் யப்பட உள்ளனர்.

animated gifபட்டதாரி ஆசிரியர்

சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட் டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்துக்கு ராம நாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவுதாரர்கள் பரிந் துரை செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 1.1.2012 அன்று 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இதன்படி தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் கள் 10.5.2010 வரையும், பொதுப்பிரிவினர் முன்னுரி மையற்றவர்கள் 27.5.2008 வரையும் பரிந்துரை செய்யப் பட உள்ளனர்.

animated gifஇதேபோல ஆங்கில பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு முன் னுரிமை உள்ளவர்கள் அனை வரும், ஆதிதிரா விட வகுப்பை சேர்ந்த முன்னுரிமையற்ற பெண்கள் 1.2.2008 வரையும், கணிதம் பாட ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை உள்ள வர்கள் அனைவரும், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த முன்னுரிமையற்ற அருந்ததி யர் இனத்தினர் மற்றும் பிற்ப டுத்தப்பட்ட முன்னுரிமை உள்ள முஸ்லிம் வகுப்பினர் அனைவரும், பிற்பட்ட முன் னுரிமையற்ற முஸ்லிம் வகுப் பினர் 27.9.2010 வரையும் பரிந்துரை செய்யப்பட உள் ளனர்.

animated gifஇயற்பியல்

இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முன்னு ரிமை உள்ளவர்கள், அருந்ததி யர் இனத்தை சேர்ந்தவர்கள், பிற்பட்ட முன்னுரிமை உள்ள முஸ்லிம் வகுப்பினர் ஆகி யோர் அனைவரும், பிற்பட்ட முஸ்லிம் வகுப்பை சேர்ந்த அனைவரும் பரிந்துரை செய் யப்பட உள்ளனர். வேதியியல் பட்டதாரி ஆசிரியர் பணியி டத்துக்கு முன்னுரிமை உள்ள பொது போட்டியாளர்கள் 16.9.2009 வரையும், ஆதிதிரா விட வகுப்பை சேர்ந்த அருந்த தியர் இனத்தை சார்ந்தவர்கள் அனைவரும் பரிந்துரை செய் யப்பட உள்ளனர்.

தாவரவியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆதிதிரா விட வகுப்பை சேர்ந்த அருந்த தியர் இன முன்னுரிமை உள்ள பெண்கள் அனைவரும், முன் னுரிமையற்ற அருந்ததியர் இன பெண்கள் 15.9.2009 வரையும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பை சேர்ந்த முன்னுரிமை உள்ளவர்கள் அனைவரும், பிற்பட்ட முஸ் லிம் வகுப்பை சேர்ந்த முன் னுரிமையற்றவர்கள் 2.9.96 வரையும், பிற்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமையற்ற பெண்கள் 20.12.95 வரையும் பரிந்துரை செய்யப்பட உள் ளனர்.

animated gifபரிந்துரை

உயிரியல் பட்டதாரி ஆசிரி யர் பணிக்கு பொதுப்போட்டி யாளரை சேர்ந்த முன்னுரிமை உள்ளவர்கள் 12.7.2006 வரை யும், புவியியல் பட்டதாரி ஆசி ரியர் பணிக்கு முன்னுரிமை உள்ளவர்கள் அனைவரும், பொதுப்போட்டியாளர்கள் முன்னுரிமையற்றவர்கள் 10.11.98 வரையும், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பொதுப் போட்டியாளர்கள் முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரை செய் யப்பட உள்ளனர்.

எனவே கல்வித்தகுதியும், பதிவு மூப்பும் உடைய பதிவு தாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட விவரத்தை இன்று (19-ந் தேதி)க்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்க ளது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட விவ ரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீசுவரன் தெரிவித் தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.