சென்னை: தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் வகையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க முதல்வர் ஜெ., தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உடனடியாக திறக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் , இதற்கு பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மக்களிடம் முதல்வர் ஜெ., கோரிக்கை விடுத்துள்ளார். கூடங்குளம் சுற்றுப்புற வளர்ச்சி பணிக்கு ரூ. 500 கோடி ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார்.
மீன் குளிர் பதனீட்டு நிலையம் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது. முதல்வரின் முடிவை அனைவரும் மனதார வரவேற்றுள்ளனர். மின் புழுக்கத்திற்கு ஒரு விடிவ பிறந்தாச்சு., கூடங்குளம் விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. நீண்ட காலமாக சட்டத்தின்சாட்டையை சுழற்றாமல் இருந்து வந்த தமிழக போலீசார் தற்போது களத்தில் இறங்கி 10 பேரை கைது செய்திருக்கின்றனர். மேலும் தொடர்ந்து உதயக்குமார் உள்ளிட்ட பலரை கைது செய்யும்நடவடிக்கை இருக்கலாம் என்றும், இதனால் எழும் பதட்டத்தை சமாளிக்க கூடங்குளம் ஒட்டிய பகுதிகளில் தமிழக மற்றும் கடலோர காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் நெல்லையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய, மாநில அரசின் குழுக்கள் பாதுகாப்பில் பிரச்னை இல்லையென்றும், திறப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சங்கரன் கோவிலில் இடைதேர்தல் முடிந்த பின்னர் அணுமின்நிலைய பணிகள் துவங்கும், இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. அணுமின் நிலைய பணிகள் இன்னும் 15 நாட்களுக்கு துவங்கிவிடும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் தென்மண்டல ஐ.ஜி.,ராஜேஸ்தாஷ், நெல்லை டி.ஐ.ஜி.,வரதராஜ் நெல்லை எஸ்.பி., விஜயேந்திர பிதரி , ஆகியோர் தலைமையில் சுமார்2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 10 பேர் அதிரடி கைது! அடுத்தக்குறி உதயக்குமார் ? போலீஸ் குவிப்பு ! : இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் செல்வராஜ் , போராட்டக்காரர்களை இன்று நெல்லைக்கு வருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் நினைத்த
நேரத்தில் வர முடியாது ,யோசித்து சொல்கிறோம் என்று கூறி விட்டனர். இதனையடுத்து இன்று காலையில் போலீசார் போராட்டக்குழுவில்உதயக்குமாருக்கு பக்கபலமாக இருந்து வந்த வக்கீல் சிவசுப்பிரமணியன் , ராஜலிங்கம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள உதயக்குமாரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல்வரின் இந்த முத்தான முடிவை அனைரும் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.