மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 6 நாளில், 16 ஆயிரத்து 126 விற்பனையாகியுள்ளன.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விண்ணப்ப விற்பனை, மாவட்டத்தில் கடந்த, 22ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே, 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாயின.
கடந்த, 26ம் தேதி, 7,500 விண்ணப்பங்கள் விற்பனையாயின. நேற்று முன்தினம், 3,500 விண்ணப்பங்களும், நேற்று, 626 விண்ணப்பங்களும் விற்பனையாகின. கடந்த, 6 நாட்களில் மொத்தம், 16 ஆயிரத்து, 126 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
மேலும், 10 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் விண்ணப்பப் படிவங்கள் வரவழைக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் என, மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.